காவிரியின் குறுக்கே அணை கட்டாததால் தான் இவ்வளவு தண்ணீர் தட்டுப்பாடு என கூறும் நண்பர்களுக்கு....
முதலில் நீர் மேலாண்மை பற்றியோ நீர் பகிர்மானம் பற்றியோ எனக்கு பெரிய அறிவு இல்லை ஒரு சாதாரண மனிதனாக என் சிற்றறிவுக்கு பட்டதை எழுதுகிறேன் தவறு இருப்பின் சுட்டிகாட்டவும்.
தமிழகத்தில் மிக பெரிய நீர் ஊற்றோ இல்லை ஆவியாகி மேகமாக செல்லும் மேககூட்டங்களை தடுத்து மழையாக பொழிய வைக்க கூடிய மிக பெரிய மலை குன்றுகளோ இல்லை. தாமிரபரணியை தவிர்த்து அதுவும் நெல்லை மாவட்டத்தோடு சரி அதையும் முடிந்த வரை அழித்துவிட்டோம் அந்த கதையை வேறொரு பதிவில் பேசுவோம்.
ஆக நமக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றால் அது அண்டை மாநிலங்களில் இருந்து நம் மாநிலத்திற்குள் பாயும் நதிகள் மூலம் மட்டும் தான். குறிப்பாக தமிழகத்தில் 50% க்கு மேல் காவிரியை தான் நம்பியுள்ளோம். கிட்டத்தட்ட கி.பி ஒன்றாம் நூற்றாண்டில் தொடங்கி காவிரியின் பிள்ளைகளாக தான் வளர்ந்துள்ளோம்.
நம்மிடம் இருக்கும் மிக பெரிய அனையான மேட்டூர்அணை(93 TMC) இந்த அணைக்கே கர்நாடகா தரும் தண்ணீர் பற்றவில்லை இதில் வேறு அணைகட்டி என்ன செய்வது?
சரி நீங்கள் சொல்வது புரிகிறது. அவன் தான் வெள்ளம் வந்துவிட்டால் மடமடவென திறந்து விடுகிறானே அப்போது செமித்துகொல்லாமே. அதற்க்காவாவது அணைகட்டலாமே என்கிறீர்கள்.
நன்றாக சிந்தித்து பாருங்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை வெள்ளம் வருகிறது? குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை. அப்படி வெள்ளம் வந்த போது கர்நாடகா அதிகபட்சமாக திறந்துவிட்ட நீரின் அளவு 250 TMC மட்டுமே. தமிழகத்தின் தேவையே 190 TMC என்று அளவிட்டிருக்கும் பட்ச்சத்தில் அப்படி அதிகமான வெள்ளம் வந்தபோது கடலில் கலந்துவீணான நீரின் அளவு 60 TMC மட்டுமே.
இப்படி ஒரு முறை அதிகபட்சமாக திறந்துவிட்ட 60 TMC கணக்கு காட்டி தான் தமிழ்நாடு கர்நாடக எல்லையில் 60 TMC அளவுள்ள மேகதாது அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்துகொண்டிருக்கிறது. இங்கு தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட கொடுக்க முடியாது என்று சொல்லும் சித்தாராமையா அதே வாயால் தமிழகத்திற்கு கொடுத்தது (190 TMC) போக 60 TMC உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க மேகதாது அணை கட்டுகிறோம் என்பது கேலிகூத்தானது. அப்படி இந்த அணையை இவர்கள் கட்டிவிட்டார்கள் என்றால் காவிரி டெல்ட்டா பகுதி பாலைவனமாவது உறுதி.
சரி மேகதாது அணை கட்டவில்லை என்றே வைத்துகொள்வோம் நாம் உபரியாக சிந்தும் அந்த 60 TMC தண்ணீரை சேமிக்க மேட்ரூர் அணைக்கு அடுத்தாற்போல் ஒரு அணையை கட்டிவிட்டோம் என்றே வைத்துகொள்ளுங்கள். இப்போது அந்த அணைக்கு தண்ணீர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்ப்படும் அதிக படியான வெள்ளத்தில் தான் அப்போதும் எவ்வளவு கிடைக்கும் இதுவரை அதிக பட்சமாக வீணான அந்த 60 TMC தான். இந்த 60 TMCயை அடுத்து கர்நாடகாவில் வெள்ளம் வரும் வரை பகிர்ந்தளித்து சமாளிக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. மேலும் பறந்து விரிந்த அணைகளில் தண்ணீரை சேமித்து வைத்தால் அது அப்படியே இருந்துவிடுமா என்ன? அடிக்கும் வெயிலில் ஆவியாகி மீண்டும் மேக கூட்டங்களாக கர்நாடகாவிற்கே சென்றுவிடும்.
ஆக என்னதான் நாம் எத்தனை அணைக்கட்டுகளை கட்டி வைத்துகொண்டிருந்தாலும் கர்நாடாகவை நம்பி தான் அத்தனை அணைகளும் காத்துகொண்டிருக்கும். எனவே என்னதான் தமிழகம் ஆயிரம் அணைகளை கட்டிவைத்திருந்தாலும் அத்தனை அணைகளும் கர்நாடக அணைகளில் கதவுகள் திறப்பதை எதிபார்த்தே காத்திருக்கும் பரிதாபத்திற்குரிய நிலையில் தான் இருக்கும்.
மேலும் ஆரம்ப காலத்தில் ஆரமித்த இடத்திலிருந்து ஓடி அத்தனை நீரும் கடலில் கலந்த காலம் போயி அணைகளாக கட்டி வெறும் சாக்கடையையும் தொழிற்சாலை கழிவுகளையும் மட்டுமே கடலுக்கு அனுப்புவதால் நாம் இயற்கையின் கோபத்திற்கு ஆளாகிவிட மாட்டோமா சிந்தித்து பாருங்கள் மக்களே.
இன்னுமும் நீர் மேலாண்மை, நதி நீர் இணைப்பு, நீர் பகிர்மானம் மற்றும் நீரை முறைபடுத்தி அத்தனை ஏரி, கண்மாய், குளம் குட்டைகளுக்கு கொண்டு செல்லும் அத்தனையிலும் மேம்பாடு அடையவேண்டும். இலவசங்களுக்காக தமிழக அரசு ஒதுக்கும் பல லட்சம் கோடிகளில் சில லட்சங்கோடிகளை இந்த திட்டங்களுக்கு ஒதுக்கலாம். இந்த திட்டங்களை நல்ல வல்லுனர்களை வைத்து இயற்கைக்கும் எந்த பாதிப்பும் வராமல் செய்யலாம். ஆனாலும் நாம் என்ன தான் திட்டங்கள் போட்டாலும் அத்தனையும் கர்நாடக அணை கதவுகளின் இடுக்குகளில் நசுக்க படாமல் காக்க வேண்டுமானால். எந்த அரசும் அமைப்பும் சாராத காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த அமைப்பை மத்திய அரசு உருவாக்குமா?
எனக்கு தெரிந்து மத்தியில் ஆளும் எந்த கட்சிக்கும் தமிழகத்தில் பெரிய ஆதரவு இல்லாத சூழ்நிலையில் அவர்கள் கர்நாடக ஆதரவு நிலைப்பாட்டை தான் எடுப்பார்களே தவிர நமக்காக எதவும் செய்ய மாட்டார்கள். பாவப்பட்ட தமிழன் நாமுள்ள காலத்திலும் அதற்கு பிந்தைய காலத்திலும் தண்ணீருக்காக அடிபட்டு சாக வேண்டியதே எழுத படாத விதி. :(
தொடரும்.....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக