ஜிகர்தண்டா - பார்த்தேன் பெயரிலேயே தெரிந்திருக்கும் இது மதுரை பற்றிய படம் என்று.... மதுரை என்றால் கண்டிப்பாக ரவுடி கதை தான் என்பதும் அனைவரும் எளிதாக யுகிக்க கூடியதே... இந்த சினிமா படம் எடுக்குறவங்களுக்கு என்னை மாதிரி நல்லவிங்க எல்லாம் மதுரைல கண்ணுக்கு தெரியமாட்டோம் போல.... ;)
சரி படத்துக்கு வருவோம் படத்தில் ஹீரோ சித்தார்த்தை விட வில்லனாக வரும் பாபி அதிக காட்சிகளில் வருகிறார்.... வருவது மட்டுமல்ல நடிப்பிலும் பொளந்துகட்டி இருக்கிறார்... பொதுவா ரவுடின்னா வெட்டு குத்து கொலை எல்லாம் இருக்கும் இந்த படத்துலயும் இருக்கு அதே நேரத்துல ஒரு ரவுடி சினிமால நடிச்சா எப்படி இருக்கும் அப்படின்ற மாதிரி கதைய நகத்திட்டு போயிருக்காரு இயக்குனர்...
கதாநாயகன் சித்தார்த் படம் முழுவதும் ஒரு அப்பாவியாவும் படம் முடியும் போது அடப்பாவியாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்... கதாநாயகி ஒரு நாலஞ்சு காட்சில தான் வருதுன்றது படம் பாக்க போறவங்களுக்கு ஒரு நல்ல செய்தி... அவ்வளவா ஜொலிக்கல... மேக்கப் ரொம்ப கம்மி... மதுரை பொண்ணுக அதிகமா மேக்கப் போடமாட்டாங்கன்னு சொல்லிருக்கார் போல இயக்குனர்... பெரிய திருப்புமுனை ஏற்படுத்துற கதாபாத்திரம் இல்லைனாலும் குடுத்த வேலைய சிறப்பா செய்திருக்காங்க கதாநாயகி....
அப்பறம் படத்தில் கதாநாயகன் சித்தார்த்தின் நண்பனாக வரும் கருணாகரன் எல்லாபடத்துலையும் போல நண்பன் கூட இருந்து சந்தோஷம் துக்கம் அடி மிதி எல்லாம் வாங்கி இருக்காரு... அவரின் பாணியில் அப்பவி முகத்தை வைத்துகொண்டு காமெடியையும் சிறப்பாக செய்திருக்கிறார்...
இந்த படத்துல உண்மையான ஹீரோன்னா அது வில்லனா வரும் பாபி சிம்ஹா தான்... மனுஷன் ரவுடி தனத்துள மட்டும் இல்லை காமெடிலையும் கலக்கி இருக்காரு... இவர் மட்டுமில்ல இவர் கூட கூட்டாளிகாக வரும் மற்ற ரவுடிகளும் நல்லாவே நடிச்சிருக்காங்க....
முதல் பாதி முடிவுல ஒரு பயங்கர திருபத்த கொடுத்து இளைவேளை விட்டு திரும்பவரைல அடுத்த பாதில என்ன நடக்கும்ன்னு யுகிக்கிறது கொஞ்சம் கஷ்ட்டம் தான்... இது மட்டுமில்ல பல கட்சிகள் அப்படி தான்... நம்மளால அவ்வளவு எளிதா அடுத்து நடப்பதை யுகிக்க முடியாது... இரண்டாம் பாதில பின் பாதி கொஞ்சம் மெதுவா போன மாதிரி இருந்த்தது அதை மட்டும் தான் குறை சொல்ல முடியும்... மற்ற படி இயக்குனர் திரைகதையை மிக அருமையாக நகர்த்தி சென்றிருக்கிறார்....
இசை பத்தி சொல்லனும்ன்னா படத்துல இரண்டு பாட்டுகள் மட்டும் தான் முழுசா வருது அதுல ஒன்னு பரவாயில்லை அந்த குத்து பாட்ட கேக்க ரொம்ப சிறப்பா இல்லைனாலும் பார்த்து ரசிக்கலாம்... ஒரு வித்தியாசமான இடத்துல வச்சு எடுத்திருப்பாங்க... மற்ற எல்லாம் சின்ன சின்ன பாடல்களா தான் வருது... பின்னணி டமால் டுமால்ன்னு போட்டு மண்டைய உடைக்காமா பழைய கவ் பாய் பாணில இருக்கு... நல்ல பின்னணி இசை....
பீட்சா இயக்குனர்ன்னு ரொம்ப எதிர் பார்த்து போகமா இருந்தீங்கன்னா இதுவும் ஒரு நல்ல படம்... அதே போல ரொம்ப லாஜிக் பாக்காதீங்க... அப்பறம் அவன் ஏன் இப்படி பண்ணுனான் இவன் ஏன் அப்படி பண்ணலைன்னு கேட்டுகிட்டே இருப்பீங்க...
பீட்சாவை நல்ல கார சாரமாக தந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டாவில் சுகரை அளவாகவே போட்டிருக்கிறார்... மொத்தத்தில் ஜிகர்தண்டா திகட்டவில்லை....
-ஜெயா
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக