ஞாயிறு, 24 மே, 2020

குப்பை - தனிமை

தொட்டிக்குள் அடைத்தவுடன் கப்சிப்பென்று அமைதியடைந்தன
சற்றுமுன் சரேல் சரேல் என தனிமையின் வெறுமையில்
கத்தி ஓடிய சருகுகள்...

ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஒரு கூடைக்
குப்பைகளை தன்னுள் கொட்டிக் கொண்டே செல்கிறது
பயணிகளற்ற அந்த ஒற்றைத் தொடர்வண்டி...

குடலைத் தோண்டி எடுக்கும் நெடி எந்த பக்கம் நுழைந்தாலும்
எல்லாப் பக்கமும் அணை போட்டுத் தடுக்கும்
வல்லமை கொண்ட எஃகு மூக்கன் அவன்...

அந்த வீதியில் உள்ள அத்தனை முகமும் 
அவனுக்கு பரிச்சியம்...  
எந்த முகமும் அவனுக்காக செலவழித்ததில்லை ஒரு நிமிடம்...

எப்போதாவது கிடைக்கும் ஓய்வுநேரத்தின்
தனிமையின் கொடுமையை போக்க அவனைச்
சுற்றி சுற்றி வரும் கரப்பான்பூச்சியே அவன் உற்ற நண்பன்...

- ஜெயக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக